கோணேஸ்வரா இந்துக்கல்லூரி திருகோணமலையில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையாகும். இது 1897 ல் திருகோணமலையில் இருந்த சில பெரியார்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரி 2100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் 15 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்டத்தின் ஒரு பெரும் கல்வி வழங்கும் தாபனமாக விளங்குகின்றது. பொதுப் பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெறுவதோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புகின்ற கல்லூரியாகவும் விளங்குகிறது. விளையாட்டு, சாரணியம், கலை, இலக்கியம் கலாசாரம் போன்ற பல்வேறு இணைக் கல்வி முயற்சிகளிலும் மாவட்ட மாகாண தேசிய மட்டங்களில் வெற்றிகள் பலவற்றை இக்கல்லூரி பெற்றுக்கொண்டிருக்கின்றது.
Web site -http://www.trincohindu.sch.lk/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment