நிர்வாகக் கட்டமைப்பு
திருகோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன.
- திருகோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருகோணமலை நகரப்பகுதி
- குச்சவெளி - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- பதவிசிறிபுர - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- கோமரன்கடவல - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமாரேசன்கடவை தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
- மொரவேவா - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- தம்பலகாமம் - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
- கந்தளாய் - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
- கின்னியா - பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
- சேருவில - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- ஈச்சிலம்பற்றை - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
- மூதூர் - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டபிரதேசம். தமிழர்கள் உள்ளபிரதேசம் இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
No comments:
Post a Comment